Recent Post

6/recent/ticker-posts

ஆசியக் கோப்பை ஸ்டேஜ் 3 வில்வித்தைப் போட்டி / ASIA CUP STAGE 3 ARCHERY

  • அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஸ்டேஜ்-3 வில்வித்தைப் போட்டியில் இந்திய ஜூனியர் வீரர், வீராங்கனைகள் 5 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
  • தனிநபர் மகளிர் பிரிவில் இந்தியாவின் பிரகதி, ஆதித்தி ஸ்வாமி, பர்னீத் கவுர் ஆகியோர் முதல் 3 இடங்களைப் பெற்றனர். 
  • காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் பிரியான்ஷ், ஓஜாஸ் டியோடேல் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளியைக் கைப்பற்றினர். காம்பவுண்ட் அணி பிரிவில் இந்திய ஆடவர், மகளிர் அணியினர் தங்கத்தைக் கைப்பற்றினர்.
  • ரிகர்வ் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி கிடைத்தது. ஆடவர் அணிப் பிரிவில் ஆகாஷ் மிருணாள் சவுகான், பார்த் சாலுங்கே ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது. 
  • ரிகர்வ் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் திஷா பூனியா-சாலுங்கே ஜோடி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel