Recent Post

6/recent/ticker-posts

48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் / 48TH GST COUNSIL MEETING

TAMIL

  • 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலம் நடந்தது. இதில், பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
  • தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் வரி விதிப்பில் மற்றும் உச்சவரம்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
  • எஸ்யூவி கார்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு 22 சதவீதம் செஸ் வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. 4 நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் எஸ்யூவி மோட்டார் வாகனத்திற்கு 22% இழப்பீடு செஸ் பொருந்தும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • ஜிஎஸ்டியின் கீழ் வழக்குத் தொடர வரித் தொகையின் குறைந்தபட்ச வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 
  • ரூ.5 கோடிக்கும் அதிகமான மோசடி குற்றங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஜிஎஸ்டி சட்டம் தற்போது வரம்பை 1 கோடியாக நிர்ணயித்துள்ளது.
  • சரக்குகள் அல்லது சேவைகள் வழங்கப்படாமல் அல்லது இரண்டும் இல்லாமல் போலி பில்களை வழங்கிய குற்றத்தைத் தவிர, வரித் தொகையில் தற்போது 50 முதல் 150 சதவீதம் வரை கூட்டுத் தொகை, 25 முதல் 100 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. போலி பில் தொடர்பான அபராதம் ரூ.1 கோடியாக தொடரும்.
  • தவிடு, உமி ஆகியவற்றுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மோட்டார் ஸ்பிரிட்டுடன் (பெட்ரோல்) கலப்பதற்காக சுத்திகரிப்பு ஆலைகளுக்கு வழங்கப்படும் எத்தில் ஆல்கஹால் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
  • வெல்லம் மற்றும் பல்வேறு வகையான அப்பளங்களுக்கு 18% வரி நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • அக்டோபர் 1, 2023 முதல் இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் மூலம் மாநிலங்களுக்குள் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
  • ரூபே கடன் அட்டைகள், குறைந்த மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்குரிய பிம் யுபிஐ ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் வங்கிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்கு வரிவிதிப்பு கிடையாது. புதிதாக எந்த பொருள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை. 
  • ஜிஎஸ்டியில் பதிவு செய்யாதவர்களுக்கு சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால் பணத்தைத் திரும்பப் பெறுகின்ற நடைமுறை இப்போது இல்லை. எனவே இதில் மாற்றம் கொண்டுவர சிஜிஎஸ்டி விதிகள் 2017ல் திருத்தம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்தது
ENGLISH
  • The 48th GST Council meeting was chaired by Union Finance Minister Nirmala Sitharaman through video. In this, various state finance ministers and officials participated.
  • Finance Minister Palanivel Thiagarajan participated on behalf of Tamil Nadu Government. Some changes were made in the levy and ceiling in this meeting.
  • Taxation of SUVs has been discussed and 22 percent cess has been implemented. It has been clarified that 22% compensation cess will be applicable for SUV motor vehicle fulfilling all 4 conditions.
  • The minimum threshold of tax amount for suing under GST has been raised from Rs 1 crore to Rs 2 crore.
  • The Union Government has issued an order to register cases in cases of fraud involving more than Rs 5 crore. But the GST Act currently sets the limit at 1 crore.
  • The cumulative amount has been reduced from 25 to 100 per cent, which currently ranges from 50 to 150 per cent of the tax amount, except for the offense of issuing fake bills without supply of goods or services or both. The penalty related to fake bill will continue to be Rs.1 crore.
  • It has been decided to reduce the duty on bran and husk from 5 percent to nil.
  • The duty on ethyl alcohol supplied to refineries for blending with motor spirit (petrol) has been reduced from 18 per cent to 5 per cent.
  • It has been announced that 18% tax will continue on Jaggery and different types of pancakes.
  • It has been decided to allow intra-state delivery of goods by e-commerce operators from October 1, 2023.
  • The incentive given to banks by the Union Government under the scheme to encourage RuPay credit cards and PIM UPI for low-value transactions is not taxable. No new goods are subject to GST.
  • There is now no refund procedure for non-GST registrants in case of service defects. Therefore, the GST Council recommended to amend the CGST Rules 2017 to bring about a change in this

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel