Recent Post

6/recent/ticker-posts

தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.560 கோடியில் குடிநீர் திட்டம் / Rs.560 crore drinking water project in Thoothukudi and Tiruvallur districts

  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர், விளாத்திகுளம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 136 கிராம ஊராட்சிகளில் உள்ள 363ஊரகக் குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் திட்டம் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தினமும் ஒரு நபருக்கு 55 லிட்டர் வீதம், மொத்தம் 16.57 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • இதில், தாமிரபரணி நீராதாரத்தைக் கொண்டு, நீர் எடுப்பு கிணறு மூலம் தண்ணீர் எடுத்து, சேதுராமலிங்கபுரத்தில் நிறுவப்பட உள்ளசுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்.
  • இந்த திட்டம் மூலம் 3.05 லட்சம்பேர் பயன் பெறுவதுடன், புதிதாக 92,407 குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. 
  • மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செறுக்கனூர், தாடூர், எஸ்.அக்ரஹாரம், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம் கிராம ஊராட்சிகளுக்கும், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை, வாங்கனூர், ஜிசிஎஸ் கண்டிகை மற்றும் எஸ்விஜிபுரம் ஆகிய 9 ஊராட்சிகளில் அடங்கிய 115 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இதற்குத் தேவையான நீரை,கொசஸ்தலையாற்றை நீராதாரமாகக் கொண்டு, 6 உறிஞ்சு கிணறுகள் மூலம் தினமும் 2.76 மில்லியன் தண்ணீர் எடுக்கப்பட்டு, குடியிருப்புகளுக்கு வழங்கப்படும். 
  • இதன் மூலம் 42 ஆயிரம் பேர் பயன்பெறுவதுடன், 255 புதிய குடிநீர்க்குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டங்களுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகைரூ.560.30 கோடி. இந்த திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel