Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவின் தேசிய தொலை மருத்துவம் சேவையான - இ-சஞ்சீவனி 8 கோடி தொலைத் தொடர்புகளை எட்டியுள்ளது / India's national telemedicine service - e-Sanjivani has reached 8 crore telemedicine connections

  • மத்திய அரசின் கட்டணமில்லா தொலை மருத்துவம் சேவையான இ-சஞ்சீவனி, குறிப்பிடத்தக்க சாதனையாக, 8 கோடி தொலைத்தொடர்புகளைக் கடந்து வியக்கத்தக்க வகையில் மற்றொரு மைல்கல்லைத் தாண்டியுள்ளது. 
  • கடைசி 1 கோடி ஆலோசனைகள் குறிப்பிடத்தக்க காலக்கெடுவில் சுமார் 5 வாரங்களில் பதிவு செய்யப்பட்டவை. இது டெலிமெடிசின் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் காட்டுகிறது.
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இ-ஹெல்த் முன்முயற்சியான, இ-சஞ்சீவனி ஒரு தேசிய டெலிமெடிசின் சேவையாகும். இது வழக்கமான நேரடி உடல்நல ஆலோசனைகளுக்கு மாற்றாக இணையதளம் வழியாக ஆலோசனை வழங்க முயற்சிக்கிறது.
  • இந்த முன்முயற்சி, 3 ஆண்டுகளுக்குள், உலகின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான டெலிமெடிசின் தளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது இரண்டு சிறப்பங்களைக் கொண்டுள்ளது. 
  • ஒன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நோயாளிகளை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளது. மற்றொன்று தேசத்தின் தொலைதூர பகுதிகளில் அதன் இருப்பை உணர்த்துகிறது.
  • இ-சஞ்சீவனி புறநோயாளி பிரிவு, 2,22,026 நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் 1,144 இணையதளப் புறநோயாளி பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்தத் தளம் ஒரே நாளில் 4.34 லட்சம் நோயாளிகளுக்கு சேவைசெய்து சாதனை படைத்துள்ளது.
  • இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் பத்து மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசம் (28242880), மேற்கு வங்கம் (10005725), கர்நாடகா (9446699), தமிழ்நாடு (8723333), மகாராஷ்டிரா (4070430), உத்தரப் பிரதேசம் (3763092), மத்தியப் பிரதேசம் (3283607), பீகார் (2624482), தெலங்கானா (2452529), குஜராத் (1673888).

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel