நாசாவின் தொலைதூர சாதனையை முறியடித்த ஓரியன் விண்கலன் / Orion Spacecraft Breaks NASA's Distance Record
- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஓரியன் விண்கலன், நிலவை சுற்றும் பணியில் ஒரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது.
- திங்கள்கிழமை பூமிக்கு அப்பால் சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் கிலோ மீட்டர் (2 லட்சத்து 70 ஆயிரம் மைல்கள்) தூரத்தை இது அடைந்தது.
- இதுவரை விண்வெளி வீரர்களை ஏற்றிச்செல்ல வடிவமைக்கப்பட்ட விண்கலங்கள் பயணித்த தூரத்தை விட இது அதிக தொலைவாகும்.
- ஓரியன் விண்கலனை கொண்டு நாசா மிகவும் சிக்கலான பயணங்களைத் திட்டமிடுகிறது. அவை அனைத்தும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
0 Comments