TAMIL
- புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சியில், தமிழகத்தை தலைநிமிரச் செய்த ஒரு சில திட்டங்களை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறேன்.
- தமிழக மக்களின் ஏழ்மையை ஒழிப்பதற்கும், மக்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அதிக முன்னுரிமை கொடுத்தார்.
- அதுவரை தனியார் கடைகளில் பகுதிநேரமாக இயங்கி வந்த ரேஷன் கடைகளில் ஏராளமான தில்லுமுல்லுகளும், முறைகேடுகளும் நடந்து வந்தன. எனவே, நேரடியாக அரசு சார்பில் 22 ஆயிரம் முழுநேர ரேஷன் கடைகளைத் திறந்தார்.
- தமிழகத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான ரேஷன் அட்டை வழங்கப்பட்டு, அனைவருக்கும் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில், கோதுமை, ரவை, மைதா போன்றவை மானிய விலையில் வழங்கப்பட்டன.
- எனவே, ஒவ்வொரு அட்டைதாரரும் அன்றைய பண மதிப்பில் மார்க்கெட் விலையை விட, 200 முதல் 300 ரூபாய் வரை குறைவாக பொருட்கள் வாங்கி பயனடைய முடிந்தது.
- அனைத்து மக்களுக்கும் நல்ல குடிநீர் கிடைக்கச் செய்வதே நல்ல ஆட்சிக்கு அழகு. எனவே, தெலுங்கு - கங்கை திட்டத்தை உருவாக்கி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதியிலிருந்து, தமிழக எல்லை வரை நீண்ட கால்வாய் வெட்டி, தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தார். என்.டி.ராமா ராவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த நட்பு காரணமாகவே இது சாத்தியமானது. அதுபோல, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், செயற்கை மழை திட்டம், சிறுவாணி குடிநீர் திட்டம், சாயர்புரம் குடிநீர் திட்டம் போன்றவற்றை கொண்டு வந்து நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் குடிநீர் வினியோகத்தை சீர்படுத்தினார்
- படித்து முடித்து வேலை இல்லாத பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், கைத்தொழில் ஆசிரியர்கள், தொழிற்பயிற்சி ஆசிரியர்கள், பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி, இளைஞர்களை ஊக்குவித்தார்.
- தமிழ் சீர்திருத்த எழுத்தை அறிமுகம் செய்த பெருமையும் எம்.ஜி.ஆருக்குத் தான் உண்டு. அதேபோல், எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் மட்டும் ஏழு பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.
- இந்தியாவில் வேறு எந்த முதல்வரும் இது போன்ற சாதனை படைத்தது இல்லை. அதேபோன்று கல்வி, வேலைவாய்ப்பில் அதுவரை எந்த அரசும் கொடுக்காத அளவுக்கு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீதம் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவீதம் என, 68 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியதும் எம்.ஜி.ஆர்., தான்.
- ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால், கீழ்மட்ட நிர்வாகம் செம்மையாக நடைபெற வேண்டும் என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர்., எனவே, பரம்பரை பரம்பரையாக அதுவரை இருந்து வந்த மணியக்காரர் என்ற கிராம அதிகாரி பதவியை அவசர சட்டம் மூலம் ரத்து செய்து, வி.ஏ.ஓ., எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களை நியமனம் செய்தார்.அதுவரை ஒரு ஜாதியினர் மட்டுமே வகித்து வந்த பதவியை, அனைத்து ஜாதியினரும் பெற முடிந்தது.
- மேலும், அரசு திட்டங்கள் நேரடியாக பொதுமக்களை சென்றடைய இந்த பதவி மிகவும் உபயோகமாக இருந்தது.எம்.ஜி.ஆர்., சட்டங்களில் புரட்சிகரமானது, 1979ல் அவர் கொண்டு வந்த மது விலக்கு சட்டம் தான். மது விலக்கை கடுமையாக கடைப்பிடிக்க நினைத்த எம்.ஜி.ஆர்., மிகுந்த துணிச்சலுடன் புதுமையான அவசர சட்டங்கள் பிறப்பித்தார்.
- அதன்படி, முதல் முறை மது விலக்கு சட்டத்தில் பிடிபட்டால், மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை; இரண்டாவது முறை பிடிபட்டால், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை; மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவர் என்று அவசர சட்டம் கொண்டு வந்தார். இந்த புரட்சிகரமான திட்டத்துக்கு பெண்களிடம் அமோக ஆதரவு கிடைத்தது.
- Here I will highlight only a few projects that made Tamil Nadu stand tall during the golden era of the revolutionary leader. Until then, there were many scams and irregularities in the ration shops, which were running part-time in private shops. Therefore, he opened 22 thousand full-time ration shops directly on behalf of the government. In Tamil Nadu, the same ration card was issued without discrimination between rich and poor, and everyone was provided rice, sugar, kerosene, palm oil, wheat, semolina, maida etc. at subsidized prices in fair price shops. Therefore, every cardholder was able to benefit by purchasing products at a price of Rs 200 to Rs 300 less than the market price of the day.
- The beauty of good governance is to make good drinking water available to all people. Therefore, he created the Telugu-Ganga Project and brought water to Tamil Nadu by cutting a long canal from Krishna river in Andhra state to Tamil Nadu border. This was possible because of the friendship between NTR Rama Rao and MGR. Similarly, he improved water supply in cities and rural areas by bringing sea water into drinking water scheme, artificial rain scheme, Siruvani drinking water scheme, Sairapuram drinking water scheme etc.
- He gave monthly stipends to unemployed graduates, teacher trainees, industrial teachers, vocational teachers, engineering graduates and encouraged the youth. MGR also has the honor of introducing reformed writing in Tamil. Similarly, seven universities were created during MGR's regime alone. No other Prime Minister in India has achieved such a feat. Similarly, MGR was the first to introduce 68 percent reservation in Tamil Nadu for education and employment, 50 percent for the backward and 18 percent for the downtrodden.
- MGR realized that if the governance is to be effective, the lower level administration must be done properly, therefore, through an Ordinance, the post of village officer called Maniyakarkar, which had existed for generations, was abolished and village administrative officers called VAOs were appointed. He did. All the castes were able to get the post which till then was held by only one caste. Also, this position was very useful for government programs to reach the public directly. MGR's most revolutionary legislation was the Liquor Prohibition Act of 1979. MGR, who wanted to strictly enforce prohibition of alcohol, enacted innovative ordinances with great courage.
- Accordingly, for the first time caught in the prohibition law, imprisonment for three years; If caught a second time, imprisonment for seven years; He brought an emergency law that if he was caught for the third time, he would be deported. This revolutionary plan received overwhelming support from women.
எம்ஜிஆர் ஆட்சியின் சாதனைகள்
- சத்துணவுத் திட்டம்
- விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி
- தாலிக்கு தங்கம் வழங்குதல்
- மகளிருக்கு சேவை நிலையங்கள்
- பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்
- தாய் சேய் நல இல்லங்கள்
- இலவச சீருடை வழங்குதல் திட்டம்
- இலவச காலணி வழங்குதல் திட்டம்
- இலவச பற்பொடி வழங்குதல் திட்டம்
- இலவச பாடநூல் வழங்குதல் திட்டம்
- வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.
- ஊனமுற்றோர்களுக்கு உதவி
- இலவச ஆம்புலன்ஸ் திட்டம்
- மாதம் தோறும் உதவித் தொகை கொடுக்கும் திட்டம்
- நாள்தோறும் மதிய உணவு வழங்கும் திட்டம்
- ஆண்டிற்கு இருமுறை இலவச உடை வழங்கும் திட்டம்
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
- கைவினைஞர்களுக்கான கருவிகள் வழங்கும் திட்டம்
- படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்
- வீட்டுக்கொருவருக்கு வேலை கொடுக்கும் திட்டம்
- சுயவேலை வாய்ப்பு வழங்கும் திட்டம்
- இலவச வேட்டி சேலை திட்டம்
- குடிசைக்கு ஒரு மின்விளக்கு
- பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம்
- வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்
தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல்
- 1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார்
- எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.
- முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13 சூன், 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.
- 1981 ஆகத்து 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் “தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981” பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.
- இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமயினான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது
IMPORTANT SCHEMES INTRODUCED BY MGR
0 Comments