Recent Post

6/recent/ticker-posts

மாணவர்களுக்கான கலைத் திருவிழா 2022 - 2023 / ARTS FESTIVAL FOR STUDENTS 2023 - 2023

  • தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கலைத் திருவிழா-2022-23 போட்டிகள் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டன. 
  • பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட 206 கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன.
  • இந்த போட்டிகளில் 13,210 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 28 லட்சத்து 53,882 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில் மாநில அளவிலான இறுதிப் போட்டியில் 1,759 பேர் வெற்றி பெற்றனர்.
  • இந்நிலையில், கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 
  • இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கலை திருவிழா போட்டிகளின் விருதுகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
  • மேலும், போட்டிகளில் தரவரிசை அடிப்படையில் முதலிடம் பெற்ற 4 மாணவர்களுக்கு 'கலையரசன்' விருதும், 4 மாணவிகளுக்கு 'கலையரசி' விருதும் வழங்கி கவுரவித்தார். 
  • இதுதவிர, மாணவர்கள் வெற்றி விகிதத்தின்படி கோயம்புத்தூர், சேலம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களைப் பிடித்தன. அதிக பங்கேற்பாளர்களைக் கொண்டதற்காக வேலூர் மாவட்டத்துக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
  • விழாவில் அமைச்சர்கள் அர.சக்ரபாணி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், வி.செந்தில் பாலாஜி, கே.செஞ்சி மஸ்தான், தலைமை செயலர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் ஐ.லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel