Recent Post

6/recent/ticker-posts

டிசம்பர் மாதம் 2022 ஜிஎஸ்டி வசூல் / GST REVENUE FOR MONTH OF DECEMBER 2022

  • கடந்த டிசம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டியாக ரூ. 1,49,507 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 
  • இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.26,711 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 33,357 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.78,434 கோடி வசூலாகியுள்ளது. 
  • ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இறக்குமதி வரியாக ரூ.40,263 கோடி அடங்கும். 
  • இதுபோல், செஸ் வரியாக ரூ.11,005 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது, 
  • முந்தைய ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்டி ரூ.1.3 லட்சம் கோடி வசூலாகியிருந்தது. அத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாத வசூல் 15 சதவீதம் அதிகம். 
  • கடந்த மாதத்துடன் சேர்த்து தொடர்ந்து 10வது மாதமாக ஜிஎஸ்டி ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. 
  • நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.68 லட்சம் கோடி, மே மாதம் ரூ.1.41 லட்சம் கோடி, ஜூன் மாதம் ரூ.1.4 லட்சம் கோடி, ஜூலை ரூ. 1.49 லட்சம் கோடி, ஆகஸ்ட்டில் ரூ.1.44 லட்சம் கோடி, செப்டம்பரில் ரூ. 1.48 லட்சம் கோடி, அக்டோபரில் ரூ.1.52 லட்சம் கோடி, நவம்பரில் ரூ.1.46 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel