Recent Post

6/recent/ticker-posts

2023 - 24ம் பொருளாதார ஆய்வறிக்கை / ECONOMIC SURVEY ON 2023 - 2024

TAMIL
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சியின் கடைசி முழுமையான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லி.,யில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். 
  • அதற்கு முன்னதாக, நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லி.,யில் நேற்று தாக்கல் செய்தார். 
  • இதன் விபரம்:கொரோனா பெருந்தொற்று பரவல், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் உலக நாடுகள் முழுதும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு அமெரிக்க சந்தைகளின் மூலதனத்தை அதிகரித்தது.
  • இதன் காரணமாக, பெரும்பாலான நாடுகளின் கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது. இது நம் நாட்டின் சி.ஏ.டி., எனப்படும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரித்ததுடன், பணவீக்க அழுத்தங்களையும் அதிகரித்தது.
  • கொரோனா பெருந்தொற்று பரவல் குறைய துவங்கிய பின், ஏப்., 2021 - மார்ச் 2022 காலகட்டத்தில் நம் பொருளாதாரம் முன்னேறியது. உலக அளவில் ஒட்டுமொத்தமாக பொருளாதார நிச்சயமற்ற தன்மை, முன்னெப்போதும் இல்லாத பணவீக்கம், நிலையற்ற சந்தைகள் போன்ற சிக்கல்களுக்கு மத்தியிலும், நம் நாட்டின் மூலதனச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் சிறப்பாகவே இருந்தன.
  • கடந்த 2022ம் நிதியாண்டு உடன் ஒப்பிடும்போது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது. 
  • இதன் விளைவாக திரட்டப்பட்ட மொத்த நிதி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் திரட்டப்பட்ட நிதியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது.
  • மேலும், 2023 - 24ம் நிதியாண்டில் பணவீக்க விகிதம் 6.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நிதிக் கொள்கையில் பின்பற்றப்படும் இறுக்கம் காரணமாக, ரூபாய் மீதான அழுத்தம் தொடர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.
  • உலகப் பொருளாதார பலவீனம் காரணமாக ஏற்றுமதி எளிதாகி, உள்நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து இறக்குமதிகள் அதிகரிக்கும் என்பதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும்.
  • வலுவான நுகர்வு காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பு நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், தனியார் முதலீடு களை அதிகரித்தால் மட்டுமே வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
  • கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது. இதுவே கடந்த நிதியாண்டில் 8.7 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டான 2023 - 24ல் 6 - 6.8 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • Union Finance Minister Nirmala Sitharaman is scheduled to present the last complete budget of the second five-year regime led by Prime Minister Narendra Modi in Parli today. 
  • Prior to that, Minister Nirmala Sitharaman presented the economic report prepared by the country's Chief Economic Adviser V. Ananda Nageswaran in Parli yesterday. 
  • Due to the spread of Corona epidemic, Russia-Ukraine war, the entire world is facing economic damage. The Fed's interest rate hike boosted US markets capitalization.
  • Due to this, the value of the US dollar rose against the currencies of most countries. This has increased our country's current account deficit, known as CAD, and increased inflationary pressures. After the spread of the Corona epidemic began to decrease, our economy progressed from April 2021 to March 2022. 
  • Despite the global economic uncertainty, unprecedented inflation, volatile markets, our country's capital markets have been performing well. Compared to the previous financial year 2022, the number of small and medium enterprises has almost doubled. 
  • As a result, the total funds raised are almost three times higher than the funds raised last year on the same basis.Furthermore, the inflation rate for the 2023-24m financial year is estimated to be 6.8 percent. Due to the tightening of fiscal policy, the pressure on the rupee is expected to continue.
  • The current account deficit is likely to widen as exports and domestic economic growth due to global weakness and imports increase. A strong economy has led to improvement in employment conditions in the country. 
  • At the same time, employment opportunities can only be increased if private investments increase. In the last financial year 2022-23, the economic growth of the country was 7 percent. 
  • This was 8.7 percent in the last financial year. It is predicted to decrease to 6-6.8 percent in the current financial year 2023-24. This is said in the report. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel