Recent Post

6/recent/ticker-posts

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் - 5வது இடத்திற்கு முன்னேறிய கோலி / Most runs in ODI cricket - 5th by Kohli

  • திருவனந்தபுரத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் டாப் ஐந்து வீரர்களில் ஒருவராக அவர் இணைந்தார்.
  • கடந்த 2008 முதல் இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கோலி விளையாடி வருகிறார். மொத்தம் 259 இன்னிங்ஸில் 12,754 ரன்கள் எடுத்துள்ளார். 
  • இதில் 64 அரைசதம் மற்றும் 46 சதங்கள் அடங்கும். திருவனந்தபுரத்தில் இலங்கைக்கு எதிராக 63 ரன்கள் கடந்த போது இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.
  • முன்னதாக, ஐந்தாவது இடத்தில் 12,650 ரன்களுடன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே இருந்தார். அவரைதான் கோலி இப்போது முந்தியுள்ளார். 
  • இது தவிர சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதங்கள், இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 10 சதங்கள் போன்ற சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
  • சச்சின் டெண்டுல்கர் - 18426 ரன்கள்
  • குமார் சங்கக்காரா - 14234 ரன்கள்
  • ரிக்கி பாண்டிங் - 13704 ரன்கள்
  • சனத் ஜெயசூர்யா - 13430 ரன்கள்
  • விராட் கோலி - 12651 ரன்கள்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel