Recent Post

6/recent/ticker-posts

57வது அகில இந்திய டிஜிபி மற்றும் ஐஜிக்கள் மாநாடு நிறைவு / 57th All India DGP and IGs Conference concluded

  • தலைநகர் டெல்லியில் 57வது அகில இந்திய டிஜிபி மற்றும் ஐஜிக்கள் மாநாடு கடந்த 20ம் தேதி தொடங்கியது. 3 நாள் மாநாட்டின் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:
  • காவல்துறையை இன்னும் அதிக உணர்திறன் மிக்க துறையாக உருவாக்க வேண்டும். அதற்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். 
  • அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்வதன் மூலம், எல்லைகளையும், கடலோர பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் போலீஸ் அமைப்புகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
  • காலாவதியான கிரிமினல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். திறன்களை பயன்படுத்துவதற்கும், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும் மாநில காவல்துறையும், ஒன்றிய புலனாய்வு அமைப்புகளும் தங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். 
  • வளர்ந்து வரும் சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும், சிறந்த நடைமுறைகளை உருவாக்கவும், டிஜிபிக்கள் மாநாடு போன்று, மாநில மற்றும் மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
  • மாநாட்டில், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
  • இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 600 போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel