“ஜியோஸ்பேஷியல் ஹேக்கத்தானை” மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைத்தார் / "Geospatial Hackathon" was inaugurated by Union Minister Dr. Jitendra Singh
புதிய, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்திற்கு ஸ்டார்ட்அப்கள் முக்கியமாகும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்த்தல், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் “ஜியோஸ்பேஷியல் ஹேக்கத்தானை” தொடங்கிவைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் புவிசார் சுற்றுச்சூழல் அமைப்பில் புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட்அப்களை ஹேக்கத்தான் ஊக்குவிக்கும் என்றார்.
தேசத்தின் புவிசார் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் பங்களிக்க இளைஞர்களுக்கு அவர் அழைப்புவிடுத்தார்.
0 Comments