Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம் / TAMILNADU SCHEDULED TRIBES ENTREPRENEURSHIP FUND SCHEME

TAMIL

  • தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம் / TAMILNADU SCHEDULED TRIBES ENTREPRENEURSHIP FUND SCHEME: புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்காக 'தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம்' என்ற புதிய திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
  • இதன்மூலம், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சார்ந்த தொழில் முனைவோரால் தொடங்கி, நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்கப்படும். இந்நிதியத்துக்கு முதற்கட்டமாக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தில் பயன்பெற கடந்த மே 2022-ல் இருந்து இதுவரை 330 நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 
  • விண்ணப்பித்தவர்களில் இருந்து, தொழில்முனைவு வழிகாட்டுநர்கள், அரசு அலுவலர்கள், முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய நடுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • முதற்கட்டமாக பேக் என் பேக்,யூனிபோஸ், டவ் மேன், எக்கோசாப்ட் சொல்யூசன்ஸ், பீஸ் ஆட்டோமோசன் ஆகிய 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.7.50 கோடி பங்கு முதலீடு செய்வதற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வழங்கினார். 
  • இப்புத்தொழில் நிறுவனங்களில் அரசே முதலீடு செய்வதன் மூலமாக இந்நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் பெருகும்.
ENGLISH
  • Tamil Nadu Government has launched a new scheme 'Tamil Nadu Scheduled Tribes Entrepreneurship Fund Scheme' to achieve inclusive development of all communities in new age entrepreneurship.
  • Through this, funds will be provided in the form of equity investment or unsecured loans to innovative enterprises started and run by entrepreneurs belonging to Scheduled Castes and Scheduled Tribes. An initial fund of Rs.30 crore has been allocated for this fund.
  • Since last May 2022, applications have been received from 330 companies to benefit from this scheme. A panel of entrepreneurship mentors, government officials, investors, etc. is formed from the applicants.
  • In the first phase, 5 companies namely Pack N Pack, Unipos, Dow Man, Ecosoft Solutions and Peace Automotion were selected and the Chief Minister M.K.Stalin issued the orders to invest a total of Rs.7.50 crores in these companies. Government investment in these industries will increase new market opportunities for the companies.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel