Recent Post

6/recent/ticker-posts

ரஞ்சி கோப்பையில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி உனத்கட் சாதனை / Unathkat's hat-trick in the first over in the Ranji Trophy

  • ராஜ்கோட்டில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டெல்லி அணி முதலில் பேட் செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய சவுராஷ்டிரா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனத்கட் 3,4,5-வது பந்துகளில் முறையே துருவ் ஷோரே (0), வைபவ் ராவல் (0), யாஷ் துல் (0) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். 
  • இதன் மூலம் 88 வருட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் ஜெயதேவ் உனத்கட்.
  • இதற்கு முன்னர் 2017-18ம் ஆண்டு ரஞ்சி கோப்பை சீசனில் மும்பைக்கு எதிராக கர்நாடகாவின் வினய்குமார் இரு ஓவர்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். 
  • அவர் முதல் ஓவரின் கடைசி பந்திலும் அதன் பின்னர் 3-வது ஓவரின் முதல் இரு பந்துகளிலும் விக்கெட்கள் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel