Recent Post

6/recent/ticker-posts

எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை / ISRO successfully launched SSLV-T2 rocket

  • நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் மூலம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. 
  • இதில், பிஎஸ்எல்வி மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி மூலம் 4,000 கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
  • சிறிய செயற்கைக் கோள்களை (500 கிலோ வரை) புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வதற்காக எஸ்எஸ்எல்வி (Small Satellite Launch Vehicle-SSLV) எனும் ராக்கெட்டை இஸ்ரோ புதிதாக வடிவமைத்தது. 120 டன் எடை கொண்ட இதன் உயரம் 35 மீட்டர். மற்ற ராக்கெட்களைவிட குறைந்த அவகாசம், செலவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இதையடுத்து, புதிதாக தயாரிக்கப்பட்ட எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட்மூலம், இஓஎஸ்-07 உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.
  • ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்-டவுன் அதிகாலை 2.48 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 15 நிமிடங்களில், புவியில் இருந்து 450 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் 3 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
  • இத்திட்டத்தின் முதன்மை செயற்கைக் கோளான இஓஎஸ்-7 மொத்தம் 156 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டு. இது புவி கண்காணிப்பு மற்றும் எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வு பணிகளுக்கு பயன்படும். விண்வெளியில் ஸ்பெக்ட்ரம் கண்காணிப்பு, அலைக்கற்றையில் ஈரப்பதம் குறித்த ஆய்வுகளையும் இது மேற்கொள்ளும்.
  • கல்விசார் செயற்கைக் கோள்: இதனுடன், அமெரிக்காவின் ஜானஸ் (10.2 கிலோ), சென்னையை சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா அமைப்பின் ஆசாதிசாட்-2 (8.8 கிலோ) ஆகிய 2 செயற்கைக் கோள்களும் ஏவப்பட்டன. 
  • இதில் ஆசாதிசாட்-2 எனும் கல்விசார் செயற்கைக் கோள், நாடு முழுவதிலும் 750 மாணவிகளின் கூட்டிணைப்பில் உருவாக்கப்பட்டது. இது ரேடியோ அலைக்கற்றை குறித்த ஆய்வை அடுத்த ஓராண்டுக்கு மேற்கொள்ளும். 
  • என்சிசி 75-வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில், என்சிசி பாடலை இசைக்கும்படியும் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel