மத்திய எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய எஃகு ஆணைய நிறுவனம் (செயில்), இது வரை இல்லாத வகையில் மாதாந்தர உற்பத்தி அளவாக ஜனவரி 2023-ல் மிக அதிக உற்பத்தியை மேற்கொண்டுள்ளது.
ஜனவரி 2023-ல், இந்த நிறுவனம் 1.72 மில்லியன் டன் கச்சா எஃகு உற்பத்தியை செய்துள்ளது. கடந்த மார்ச் 2022-ல் இந்நிறுவனம் எட்டிய மிகச் சிறந்த சாதனையைவிட இது அதிகமாகும்.
ஹாட் மெட்டல் மற்றும் விற்பனைக்கால எஃகு ஆகியவற்றின் உற்பத்தியும் ஜனவரி மாதத்தில் முன் எப்போதும் இல்லாத அளவாக முறையே 1.8 மில்லியன் டன் மற்றும் 1.6 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இதுவும் மார்ச் 2022 உற்பத்தியைவிட சிறந்த வளர்ச்சியாகும்.
0 Comments