Recent Post

6/recent/ticker-posts

குத்துச்சண்டை தரவரிசையில் 3-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்

  • இந்திய குத்துச்சண்டை வீரர்களின் உயர்மட்ட செயல் திறன்களால் 36,300 ரேங்கிங் புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. கஜகஸ்தான் 48,100 புள்ளிகளுடன் முதலிடத்திலும், உஸ்பெகிஸ்தான் 37,600 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.
  • பலம் வாய்ந்த வீரர்களை கொண்ட அமெரிக்கா, கியூபா போன்ற நாடுகளை பின்னுக்குத்தள்ளி தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. குத்துச்சண்டையில் அதிகார மையமாக திகழும் அமெரிக்கா 4-வது இடத்தையும், கியூபா 9-வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போன்ற உலகளாவிய போட்டிகளில் முதல் 5 இடங்களுக்குள் தொடர்ந்து இடம்பிடித்ததன் வாயிலாக இந்திய குத்துச்சண்டை சமீபத்திய ஆண்டுகளில் முன்னோடியில்லாத வகையில் உயர்ந்துள்ளது. 
  • கடந்த இரண்டு காமன்வெல்த் விளையாட்டில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் 16 பதக்கங்களை வென்றுள்ளனர். மேலும் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் 2008 முதல் சர்வதேச போட்டிகளில் 140 பதக்கங்களை கைப்பற்றி உள்ளனர்.
  • 2016-ம் ஆண்டு முதல் இந்தியகுத்துச்சண்டை வீரர்கள், வீராங்கனைகள் 16 எலைட் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றுள்ளனர். வரும்மார்ச் 15 முதல் 26-ம் தேதி வரை பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை இந்திய குத்துச்சண்டை சங்கம் நடத்த உள்ளது. இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறஉள்ளது இது 3-வது முறையாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel