கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி போன்றவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட பண வீக்கம் அதிகரித்துள்ளது.இந்தியாவின் மொத்தப் பணவீக்கம் கடந்த நவம்பர் மாதத்தில் 5.85% ஆக இருந்தது.
இதையடுத்து கடந்த டிசம்பரில் 4.95 ஆக குறைந்தது. இந்நிலையில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 4.73% ஆக குறைந்துள்ளது.
இது இந்தியாவின் மொத்த பணவீக்கம் தொடர் சரிவிற்கு வழிவகுத்துள்ளது. கடந்த 2 ஆண்டில் இல்லாத அளவுக்கு மொத்த பணவீக்கம் குறைந்துள்ளது.
இந்த பணவீக்க விகிதம் குறைவதற்கு, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைத் தவிர, கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் ஆகியவற்றின் விலை வீழ்ச்சியும் காரணமாக எனக் கூறப்படுகிறது.
0 Comments