Recent Post

6/recent/ticker-posts

8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - 6வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன் / 8th ICC WOMEN'S CRICKET WORLD CUP - AUSTRALIA CHAMPION

  • 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
  • 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றன.
  • இந்த போட்டியின் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. முதலாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவையும், இரண்டாவது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 6 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
  • கேப்டவுன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.  
  • 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 156 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி கடைசி ஓவரில் இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
  •  
  • .

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel