Recent Post

6/recent/ticker-posts

மெட்ராஸ் பெயர் சென்னை என்று பெயர் மாற்றம் / MADRAS STATE CHANGE TO TAMILNADU

TAMIL
  • மெட்ராஸ் பெயர் சென்னை என்று பெயர் மாற்றம் / MADRAS STATE CHANGE TO TAMILNADU: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நகரம், வரலாற்று சிறப்பு மிக்கது. இதனை `மதராஸ்’ என்றும், `சென்னை’ என்றும் இரு பெயர்களால் அழைத்தார்கள். மதராஸ் என்பதை “மெட்ராஸ்” என்று பிற மொழிகளில் எழுதினார்கள். 
  • எனவே சென்னை நகரின் பெயரை சென்னை என்று ஒரே பெயரில் மட்டுமே எல்லா மொழிகளிலும் அழைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை முதல் அமைச்சர் கருணாநிதி 17.7.1996 அன்று சட்ட சபையில் அறிவித்தார்.
  • சென்னை நகர் என்று பெயர் வந்ததற்கு வரலாற்று அடிப்படையில் இரு காரணங்கள் கூறப்படுகிறன. தற்போதைய ஐகோர்ட்டு கட்டிடம் உள்ள இடத்தில் சுமார் 365 ஆண்டுகளுக்கு முன்பு சென்னகேசவர் கோவில் ஒன்று இருந்திருக்கிறது. அதனால் சென்ன கேசவபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் சென்னை என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
  • ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை (தற்போது தலைமை செயலகம் இயங்கும் இடம்) கட்ட இடம் அளித்த அய்யப்ப நாயக்கர், வேங்கடப்பன் ஆகியோர் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் “சென்னப்பட்டினம்” என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
  • அனைத்து மொழிகளிலும் “சென்னை” என்றே அழைக்கவேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பல தரப்பினரும் வரவேற்றார்கள். 
  • இந்தியாவின் முக்கிய 4 நகரங்களில் ஒன்றான பம்பாய் பெயரும் மும்பை என்று மாற்றப்பட்டது. 4.5.1995 அன்று நடைபெற்ற மராட்டிய மந்திரிசபை கூட்டத்தில் `பம்பாய்’ பெயரை `மும்பாய்’ என்று மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. இதை முதல் மந்திரி மனோகர் ஜோஷி தெரிவித்தார். டெல்லியில் பிரதமர் நரசிம்மராவை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார்.
  • அதன் பிறகு பம்பாய் என்பது மும்பாய் என்று மாறியது. கொஞ்ச காலத்தில் அதுவும் மாற்றப்பட்டு `மும்பை’ ஆனது. இதனை அடுத்து மேற்கு வங்காளத் தலைநகரும் இந்தியாவின் பெரிய துறைமுக நகருமான கல்கத்தா “கொல்கத்தா” என்று மாற்றப்பட்டது.
ENGLISH
  • Chennai, the capital city of Tamil Nadu, is rich in history. It was called 'Madras' and 'Chennai' by two names. Madras is written as “Madras” in other languages.
  • So the Tamil Nadu government decided to name the city of Chennai as Chennai in all languages. This was announced by First Minister Karunanidhi in the Legislative Assembly on 17.7.1996.
  • There are two historical reasons for the name Chennai Nagar. About 365 years ago, there was a Chennakesavar temple on the site of the present iCourt building. So it is said that Chenna was called Kesavapuram and later Chennai.
  • It is also said that Ayyappa Nayakkar and Venkatappan, where the British built St. George's Fort (where the Chief Secretariat is now located), was called "Chennapatnam" after their father Chennappa Nayakkar.
  • The Tamil Nadu government's announcement that all languages should be called "Chennai" was welcomed by many parties.
  • Bombay, one of the 4 major cities of India, was also renamed Mumbai. It was decided to change the name of ``Bombay'' to ``Mumbai'' in a meeting of the Maratha Council of Ministers held on 4.5.1995. Chief Minister Manohar Joshi said this. He met Prime Minister Narasimha in Delhi and made this request.
  • After that Bombay became Mumbai. In a short time it was also changed and became `Mumbai'. After this, Calcutta, the capital of West Bengal and India's largest port city, was renamed "Kolkata".

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel