Recent Post

6/recent/ticker-posts

சிப்ரஸின் புதிய அதிபராக நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் தேர்வு / Nicos Christodoulides elected as Cyprus new president

  • சிப்ரஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ், இரண்டாவது மற்றும் இறுதி சுற்று வாக்குப்பதிவுக்குப் பிறகு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆண்ட்ரியாஸ் மவ்ரோயானிஸ்-ஐ தோற்கடித்து 51.9% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆண்ட்ரியாஸ் மவ்ரோயானிஸ் 48.1% வாக்குகளைப் பெற்றிருந்தார்.
  • ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் DISY கட்சியின் நிகோஸ் அனஸ்டாசியாட்ஸ், 2013 முதல் ஆட்சியில் இருந்து வருகிறார், 
  • 2018 இல் அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்படி, அவர் மூன்றாவது முறையாக பதவியேற்க முடியாது. அதன்பிறகு தற்போது நடந்த அதிபர் தேர்தலில் 49 வயதான கிறிஸ்டோடூலிட்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
  • கிறிஸ்டோடூலிட்ஸ் 2022 ஆம் ஆண்டு வரை சிப்ரஸின் வெளியுறவு அமைச்சராக இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel