Recent Post

6/recent/ticker-posts

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் / Tamil Nadu is number one in wind power generation

  • தமிழகத்தில் காற்றாலைகளில் இருந்து மே முதல் செப்டம்பர் வரை, தினமும் சராசரியாக, 2,500 மெகா வாட்டும்; சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, மழை இல்லாத நாட்களில், தினமும் பகலில், 3,000 மெகாவாட்டிற்கு மேலும் மின்சாரம் கிடைக்கிறது.
  • மின் தேவையை பூர்த்தி செய்வதில், காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
  • எனவே, தமிழக மின் வாரியமும் முந்தைய காலங்களை போல இல்லாமல், தற்போது, காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுதும் பயன்படுத்தி வருகிறது.
  • மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை இந்தாண்டு ஜன., 31ம் தேதி நிலவரப்படி, நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சூரியசக்தி, காற்றாலை மின் நிலையங்களின் உற்பத்தி திறன் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • அதில், தமிழகம், 9,964 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி திறனுடன் முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, 9,918 மெகா வாட் திறனுடன், குஜராத் இரண்டாவது இடத்திலும்; 5,269 மெகா வாட் உற்பத்தி திறனுடன், கர்நாடகா மூன்றாவது இடத்திலும்; 5,012 மெகா வாட்டுடன் மஹாராஷ்டிரா நான்காவது இடத்திலும், ராஜஸ்தான், 4,681 மெகா வாட்டுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. 
  • பெரிய நிறுவனங்கள் தங்கள் காலி நிலத்தில், ஒரு மெகா வாட்டிற்கு மேலான, சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு விற்கின்றன.
  • வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களில் குறைந்த திறனில் மேற்கூரை மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் குறைந்த திறனில் சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்துள்ளனர்.
  • இந்தாண்டு ஜனவரி மாத நிலவரப்படி, தமிழகத்தில், 6,123 மெகா வாட் திறனில் நிலத்திலும், கட்டடங்களின் மேல், 373.73 மெகா வாட் திறனிலும், சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
  • நாட்டில் சூரியசக்தி மின் உற்பத்தித் திறனில், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. பட்டியலில், 16 ஆயிரத்து, 353 மெகா வாட் திறனுடன் ராஜஸ்தான் முதலிடத்திலும்; 8,747 மெகா வாட்டுடன் குஜராத், இரண்டாவது இடத்திலும்; 8,018 மெகா வாட் திறனுடன், கர்நாடகா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel