Recent Post

6/recent/ticker-posts

தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவ செயலி - செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வெளியீடு / Tolkappiyam audio format app - Published by Semmozhi Tamil Research Institute

  • தொல்காப்பியம் தமிழில் மிகப் பழமையான நூலாகும். அதில் காணப்படும் சில வழக்காறுகள், இலக்கணக் கூறுகள், வாழ்க்கை மரபுகள் ஆகியவை சங்க இலக்கிய நூல்களுக்கும் முற்பட்டவை. 
  • இதனால் அது 'தமிழ் முதல் நூல்' என்று போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை 2021-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டது.
  • அதைத் தொடர்ந்து, தொல்காப்பியம் சார்ந்த செல்போன் செயலியை வடிவமைக்கும் முயற்சியில் செம்மொழி நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதன் பலனாக சிஐசிடி தொல்காப்பியம் எழுத்து (PHONOLOGY & MORPHOLOGY MOBILE APPLICATION) என்ற
  • பெயரில், எழுத்து அதிகாரத்துக்கான துக்கான செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் செம்மொழி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த செயலியில் தொல்காப்பியப் பாடல்கள் இசையுடன் (முற்றோதல்) ஒலிக்கும்.
  • பேராசிரியர் பாவலரேறு ச.பாலசுந்தரத்தின் தொல்காப்பியம் எழுத்து ஆராய்ச்சிக் காண்டிகை உரையும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் உரையை கேட்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel