Recent Post

6/recent/ticker-posts

13வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2023 / 13th WORLD WOMENS BOXING CHAMPIONSHIP 2023

  • 13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
  • இந்த இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீனும், வியட்நாம் வீராங்கனை நுகுயென் தி தாமும் மோதினர்.
  • இதில் சிறப்பாக விளையாடிய நிகத் ஜரீன், பல குத்துகளை வியட்நாம் வீராங்கனை முகத்தில் விட்டு புள்ளிகளை குவித்தார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் நிகத் ஜரீன் வெற்றி பெற்று தங்கத்தைத் தட்டிச் சென்றார்.
  • இதன்மூலம் உலகக் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோமுக்குப் பிறகு 2 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் ஜரீன். 
  • மேரி கோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதைத் தொடர்ந்து நடைபெற்ற 75 கிலோ பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெயினும், ஆஸ்திரேலிய வீராங்கனை கேயிட்லின் பார்க்கரும் மோதினர்.
  • இதில் லோவ்லினா 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை பார்க்கரை வீழ்த்தி தங்கத்தை வென்று அசத்தினார்.
  • நேற்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் நீது கங்காஸ் (48 கிலோ பிரிவு), சவீட்டி பூரா (81 கிலோ) தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 4 தங்கப் பதக்கங்களை அள்ளியுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel