Recent Post

6/recent/ticker-posts

18-வது இந்தியா-ஆஸ்திரேலியா அமைச்சர் குழுவின் (ஜேஎம்சி) கூட்டறிக்கை / Joint Statement of the 18th India-Australia Ministerial Committee (JMC).

  • இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் சுற்றுலா அமைச்சர் செனட்டர் ஹான் டான் ஃபாரல் ஆகியோர் நேற்று சந்தித்து இருதரப்பு பொருளாதார உறவை மேலும் மேம்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை (ECTA) செயல்படுத்துவது, இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (CECA) மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளிலும் முதலீட்டை மேலும் மேம்படுத்துவது குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர். 
  • ஜி-20, இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு (IPEF) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) ஆகியவற்றில் ஈடுபடுவது குறித்தும் அமைச்சர்கள் விவாதித்தனர்.
  • இரு நாடுகளும் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்காக செயல்படுவதால், எரிசக்தி மாற்றத்தின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் எடுத்துரைத்தனர். 
  • மேலும், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைய பொருளாதாரம், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ரீதியான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உறுதிபூண்டனர்.
  • இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு ஆஸ்திரேலியா வலுவான ஆதரவை அளிக்குமென அமைச்சர் ஃபாரெல் மீண்டும் உறுதியளித்தார். 
  • நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான செயல்களை விரைவுபடுத்துவது உட்பட, வலுவான, நிலையான மற்றும் அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பாதையை உலகிற்கு கொண்டு வர ஜி-20 உதவ வேண்டும் என்று அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.
  • ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் முக்கியமான வர்த்தகக் கூட்டாளிகள் என்பதை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 31 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது. 
  • இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கணிசமாக மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel