Recent Post

6/recent/ticker-posts

2023 - 24 பருவத்திற்கான கச்சா சணலின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves Minimum Support Price (MSP) of raw jute for 2023-24 season /

  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023-24 பருவத்திற்கான கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) ஒப்புதல் அளித்துள்ளது. விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (CACP) பரிந்துரைகளின் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • 2023-24 பருவத்தில் சணலின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) (முந்தைய TD-5 தரத்திற்கு சமமான TD-3) ஒரு குவிண்டாலுக்கு ரூ.5050/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அகில இந்திய சராசரி எடை அளவிலான உற்பத்தி செலவை விட 63.20 சதவீதம் வருமானத்தை உறுதி செய்யும். 
  • 2023-24 பருவத்திற்கான அறிவிக்கப்பட்ட கச்சா சணல் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) 2018-19 நிதிநிலை அறிக்கையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அகில இந்திய சராசரி எடை அளவிலான உற்பத்திச் செலவை குறைந்தபட்சம் 1.5 மடங்கு என்ற அளவில் ஈடுகட்டும் வகையிலான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) நிர்ணயிக்கும் கொள்கைக்கு ஒத்துள்ளது.
  • இது குறைந்தபட்சம் 50 சதவீதத்தை லாப வரம்பாக உறுதி செய்கிறது. இது சணல் விவசாயிகளுக்கு சிறந்த வருமானத்தை உறுதி செய்வதற்கும் தரமான சணல் இழை தயாரிப்பை ஊக்குவிப்பதற்கும் முக்கியமான மற்றும் முற்போக்கான படிகளில் ஒன்றாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel