Recent Post

6/recent/ticker-posts

சந்திராயன் 3 திட்டத்தின் ஒலியியல், அதிர்வு சோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு / Chandrayaan 3 Mission Acoustics, Vibration Test Success - ISRO Announcement

  • சந்திராயன்-3 திட்டத்தில் பயன்படுத்தப்படும் கிரையோஜினிக் இன்ஜினின் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
  • பிப்ரவரி 24 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தின் உயர் ரக சோதனை மையத்தில் 25 வினாடிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்கு கிரையோஜெனிக் இன்ஜின் வெப்ப சோதனை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.
  • இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
  • தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலத்தின் சோதனை, ஏவப்பட்ட பிறகு அதன் இயக்கத்தன்மை, செயல்பாடுகளின் முக்கியமான கட்டம் என தெரிவிக்கப்படுகிறது. 
  • ஜூன் இறுதியில் சந்திராயன் மூன்று விண்கலத்தை விண்ணில் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இஸ்ரோ திட்டமிட்டபடி சோதனை முயற்சி வெற்றி பெற்று வருவதாக விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
  • சந்திராயன் 2 திட்டத்தின் ரோவர் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் அடையும் போது வெடித்து சிதறிய நிலையில் சந்திராயன் 3 திட்டத்தை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். 
  • சந்திரயான் -2 இன் லேண்டர், ரோவர் கலவை தோல்வியடைந்தாலும், ஆர்பிட்டர் இன்னும் நிலவின் மேற்பரப்பிற்கு மேலே வட்டமிடுகிறது, பெரிய அறிவியல் செயல்பாடுகளை நடத்தும் நிலையில் சந்திராயன் 3 திட்டத்தில் அந்த ஆர்பிட்டரும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜிஎஸ்எல்வி மார்க் 3 வகை ராக்கெட் கள் இதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் ராக்கெட்டின் செயல்பாடு மற்றும் வானிலையை பொறுத்து திட்டம் ஏவுவது குறித்த தேதிகள் அறிவிக்கப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது..

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel