Recent Post

6/recent/ticker-posts

தமிழக காவல் துறையில் 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் / Tamil Nadu Chief Minister M. K. Stalin announced 9 new announcements in the police department

  • 1973-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் தமிழக காவல் துறையில் பெண் காவலர்களின் முதல் காலடித்தடம் பதிந்தது.
  • அவர் தொடங்கி வைத்த பெண் காவலர்கள் 50 ஆண்டுகளை தொட்டு இன்று ஆண் காவலர்களுக்கு இணையாக வளர்ந்து சிங்கப்பெண்களாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறார்கள்.
  • இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் இணைந்து 50 ஆண்டுகள் தொட்டுள்ள பொன்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் டி.ஜி.பி., காவல் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
  • பெண் போலீசின் பொன் விழா முழுக்க, முழுக்க பெண் போலீசாரால் நடத்தப்பட்டது. அணிவகுப்பு மரியாதை, சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் பெண் போலீசார் நிகழ்த்திக் காட்டினர்.
  • இந்த நிகழ்ச்சியில் அவள் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். விழாவையொட்டி சிறப்பு தபால் தலையையும் முதல்வர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னான 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.
  • பெண் காவலர்களுக்கு புதிய அறிவிப்புகள் - ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம், பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி, காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை, காவலர்களின் குழந்தை காப்பகங்கள் மேம்படுத்தப்படும், கலைஞர் காவல் கோப்பை விருது, குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல், பெண்களுக்கு தனி துப்பாக்கி சுடும் போட்டிகள், ஆண்டுதோறும் பெண் காவலர்களுக்கு தேசிய மாநாடு , பணி ஆலோசனை குழு அமைக்கப்படும்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel