Recent Post

6/recent/ticker-posts

பயிற்சி போர் விமானம், கப்பல்கள் வாங்க எச்ஏஎல், எல்&டி நிறுவனங்களுடன் ரூ.9,900 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம் / Center signs deal with HAL, L&T for Rs 9,900 crore to buy fighter jets, ships

  • பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் சுயசார்பை அடைய வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாக இது அமைந்துள்ளது. இதுபோல எல்&டி நிறுவனத்திடமிருந்து ரூ.3,100 கோடிக்கு 3 பயிற்சி கப்பல்களை வாங்குவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 
  • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டவை (ஐடிடிஎம்) என்ற திட்டத்தின் கீழ் இந்த கப்பல்கள் தயாரிக்கப்பட உள்ளன. 
  • இந்நிலையில், பாதுகாப்புத் துறைக்கு பயிற்சி போர் விமானங்கள் மற்றும் பயிற்சி கப்பல்கள் வாங்க, எச்ஏஎல் மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்களுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தனித்தனி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.9,900 கோடி ஆகும். இந்த ஒப்பந்தங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது. 
  • இந்த ஒப்பந்தத்தின்படி, 70 எச்டிடி-40 ரக விமானங்களை 6 ஆண்டுகளுக்குள் எச்ஏஎல் தயாரித்து விமானப்படையிடம் ஒப்படைக்கும். விமானப்படையில் சேரும் பைலட்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும். 
  • இதுவரை பயிற்சி விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசு பாதுகாப்புத் துறையில் சில ராணுவ தளவடங்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. இந்நிலையில் எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து பயிற்சி விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 
  • எல்&டி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி, பயிற்சி கப்பல்கள் தமிழ்நாட்டில் உள்ள காட்டுப்பள்ளியில் தயாரிக்கப்படும். இந்த கப்பல்கள் 2026-ல் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். இந்த கப்பல்கள் கடற்படை மாலுமிகளுக்கு அடிப்படை பயிற்சி வழங்க பயன்படுத்தப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel