தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் அருகே விண்வெளி எரிபொருள் தொழில் பூங்கா - அறிவிப்பு வெளியீடு / Aerospace Fuel Industrial Park near Kulasekarapatnam, Tuticorin - Notification release
தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் அருகே விண்வெளி எரிபொருள் தொழில் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. செயற்கோள் ஏவுதளம் அருகே விண்வெளி எரிபொருள் பூங்காவை அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு, பொறியியல் கட்டமைப்பு மற்றும் வான்வெளி இயந்திரங்களுக்கான ரசாயன உற்பத்தி செய்ய தொழிற்பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விண்வெளி தொழில் பூங்கா மற்றும் விண்வெளி எரிபொருள் பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. தூத்துக்குடி அருகே விண்வெளி சார்
தொழிற்பூங்கா அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரியது டிட்கோ. விண்வெளி தொழில் பூங்கா மற்றும் எரிபொருள் பூங்காவை அமைகிறது டிட்கோ.
குலசேகரப்பட்டினம் அருகே இஸ்ரோ, ராக்கெட் ஏவுகளம் அமைக்கும் திட்டத்தை கருத்தில் கொண்டு விண்வெளி சார் தொழிற்பூங்கா அமைகிறது.
சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் டிட்கோ அறிவித்துள்ளது. அதன்படி, ஆலோசகர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
0 Comments