Recent Post

6/recent/ticker-posts

மேகாலயா மாநிலத்தில் முதல்வராகும் கான்ராட் சங்மா / Conrad Sangma is the CM of Meghalaya State

  • மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 27-ல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
  • இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை. ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்கான 31 இடங்கள் கிடைக்கவில்லை. என்பிபி கட்சி மட்டும் தனிப்பெரும் கட்சியாக 26 இடங்களைப் பெற்றது. 
  • இதனையடுத்து 2 இடங்களில் வென்ற பாஜக உள்ளிட்ட இதர கட்சிகளின் ஆதரவை என்பிபி தலைவரான முதல்வர் கான்ராட் சங்மா கோரி இருந்தார். 
  • இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். 
  • இதனையடுத்து 2 இடங்களில் மட்டும் வென்ற பாஜக, மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் வழங்கி உள்ளது. இதனால் மேகாலயா மாநில கூட்டணி ஆட்சியிலும் பாஜக இணைந்து கொள்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel