இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து 'மேகா டிராபிக்யூஸ் -- 1' என்ற செயற்கைக்கோளை 2011ல் விண்ணில் செலுத்தியது.
பூமியின் பருவநிலை மாற்றங்கள் குறித்து ஆராய அனுப்பப்பபட்ட இச்செயற்கைக்கோளின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் என்று சொல்லப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கியது.
இச்செயற்கைக்கோள் வாயிலாக, காலநிலை மாற்றங்கள் தொடர்பான புகைப்படங்களை உடனுக்குடன் அனுப்பி வந்தது.இந்நிலையில் இச்செயற்கைக்கோளின் பணிக்காலம் நிறைவடைந்ததால், இதை செயலிழக்க செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
இதன்படி ஏற்கனவே திட்டமிட்டப்படி, மிகவும் சவாலான பணியான, செயற்கைக்கோளை பூமியின் வளிமண்டலத்துக்கு கொண்டு வந்ததுடன், மக்கள் நடமாட்டம் இல்லாத பசிபிக் பெருங்கடல் பகுதியில் வெற்றிகரமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அழித்தனர்.
0 Comments