- பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் உரையாற்றினார்.
- 2023 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட 12 பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கருத்தரங்குகளில் இதுவே கடைசியாகும்.
- இந்த கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர், கடந்த மூன்று ஆண்டுகளாக, பட்ஜெட்டுக்குப் பிந்தைய உரையாடல்கள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
- இந்த கலந்துரையாடல்களில் அனைவரும் ஆக்கப்பூர்வமாக பங்கு பெற்றதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பட்ஜெட்டை உருவாக்குவது பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, அதனை செயல்படுத்துவதற்கான சிறந்த வழிகளைப் பற்றி விவாதித்ததாக அவர் குறிப்பிட்டார்.
- பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கலந்துரையாடல்கள், ஒரு புதிய அத்தியாயம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
0 Comments