கோடைக் காலத்தில் வெப்பநிலையை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை தாங்கினார் / The Prime Minister chaired a high-level review meeting on preparedness to face summer temperatures
வரவிருக்கும் கோடைக் காலத்தில் வெப்பநிலையை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இல்லத்தில், அவரது தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அடுத்த சில மாதங்களுக்கான காலநிலை முன்கணிப்பு மற்றும் இயல்பான மழைப்பொழிவு குறித்து, இந்திய வானிலை ஆய்வுத் துறையால் பிரதமருக்கு இந்தக் கூட்டத்தில் விளக்கப்பட்டது.
ரபிப் பருவப் பயிர்களுக்கான காலநிலைத் தாக்கம் மற்றும் முக்கியப் பயிர்களின் விளைச்சல் குறித்தும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. பாசன நீர் விநியோகம், தீவனம், குடிநீர் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அவசர காலங்களில் மாநிலங்களின் தயார்நிலை மற்றும் தேவைப்படும் பொருட்களுக்கான மருத்துவமனை உள்கட்டமைப்பு பற்றிய ஆய்வு குறித்தும் பிரதமரிடம் விவரிக்கப்பட்டது. வெப்பநிலை தொடர்பாக ஏற்படும் பேரிடர் தயார்நிலை, தணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர், உள்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, வேளாண்துறை, புவி அறிவியல் துறை ஆகியவற்றின் செயலாளர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
0 Comments