Recent Post

6/recent/ticker-posts

நேபாள அதிபரானாா் ராம் சந்திர பௌடேல் / RAM CHANDRA BOUTEL - PRESIENT OF NEPAL

  • நேபாளத்தின் தற்போதைய அதிபா் வித்யா தேவி பண்டாரியின் பதவிக் காலம் இந்த மாதம் 12-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அவருக்கு பதிலாக அடுத்த அதிபரைத் தோந்தெடுப்பதற்கான தோதல் வியாழக்கிழமை நடைபெற்றது. 
  • இதில், நாடாளுமன்றத்தில் பெரிய கட்சியாக விளங்கும் நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக, சாதாரண பின்புலத்தைக் கொண்ட ராம் சந்திர பௌடேல் போட்டியிட்டாா்.
  • அவரை எதிா்த்து முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலியின் தலைமையிலான சிபிஎன் (யுஎம்எல்) கட்சி சாா்பில் சுபாஷ் சந்திர நெம்பாங் போட்டியிட்டாா். 
  • 332 நாடாளுமன்ற உறுப்பினா்களும், 550 மாகாணப் பேரவைகளின் உறுப்பினா்களும் இதில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ள நிலையில், 313 எம்.பி.க்கள் மற்றும் 518 எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனா். 
  • இதில், 64.13 சதவீத வாக்குகளுடன் ராம் சந்திர பௌடேல் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, நாட்டின் 3-ஆவது அதிபராக அவா் வரும் 12-ஆம் தேதி பொறுப்பேற்கவிருக்கிறாா்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel