Recent Post

6/recent/ticker-posts

உலகில் முதல் முறையாக மகாராஷ்டிர மாநிலத்தில் நெடுஞ்சாலையில் 'பாகுபலி' மூங்கில் தடுப்பு / World's first 'Baahubali' bamboo barrier on highway in Maharashtra

  • மகாராஷ்டிர மாநிலத்தில் வாணி - வரோரா நெடுஞ்சாலையில் 200 மீட்டர் தூரத்துக்கு மூங்கில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. உலகில் முதல் முறையாக நெடுஞ்சாலையில் போடப்பட்டுள்ள இந்த மூங்கில் தடுப்பு குறிப்பிடத்தக்க சாதனை. இதற்கு 'பாகுபலி' என பெயரிடப்பட்டுள்ளது.
  • இது தற்சார்பு இந்தியா நடவடிக்கையில் சிறப்பான செயல்பாடு. இந்த மூங்கில் தடுப்புகள் பல அரசு மையங்களிலும், தேசிய வாகன பரிசோதனை சாலைகளிலும் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. 
  • ரூர்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி கழகத்தில் நடந்த தீ பரிசோதனையிலும், மூங்கில் தடுப்பு முதல் தர சான்றிதழை பெற்றது. இந்த மூங்கில் தடுப்பு களை 50 முதல் 70 சதவீதம் வரை மறு சுழற்சி செய்ய முடியும். 
  • ஆனால், இரும்பு தடுப்புகளை 30 முதல் 50 சதவீதம்தான் மறுசுழற்சி செய்ய முடியும். இந்த தடுப்புக்கு 'பம்புசா பால்கோ' என்ற மூங்கில் வகை பயன்படுத்தப்படுகிறது. 
  • இதன் மீது க்ரியோசோட் ஆயில் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட அதிக அடர்த்தியுடன் கூடிய பாலி எத்திலின் பூசப்பட்டுள்ளது. மூங்கில் துறைக்கும், இந்தியாவுக்கும் இது குறிப்பிடத்தக்க சாதனை.
  • இரும்பு தடுப்புகளுக்கு சரியான மாற்றாக இந்த மூங்கில் தடுப்பு விளங்குகிறது. இதனால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இல்லை. மேலும், இது ஊரக மற்றும் வேளாண் தொழிலுக்கு ஏற்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel