Recent Post

6/recent/ticker-posts

ககன்யான் எல்-110 விகாஷ் இன்ஜின் சோதனை வெற்றி / Gaganyan L-110 Vikash engine test success

  • ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி உள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
  • இதன்படி கடந்த 2007ல் ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டில் இத்திட்டத்துக்கு ககன்யான் என்று பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 
  • ககன்யான் திட்டத்துக்கு இஸ்ரோவின் அதிநவீன எல்விஎம்-3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 
  • விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான விண்கலம், விண்வெளி உடை, விண்வெளி பயணத்துக்குப் பிறகு பூமி திரும்பும் வீரர்கள் பத்திரமாக தரையிறங்குவதற்கான பாராசூட் ஆகியவை நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. வரும் 2024ம் ஆண்டு மத்தியில் ஆளில்லாத சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது.
  • இந்த விண்கலத்தில் அனுப்புவதற்காக 'வியோமா மித்ரா' என்ற பெண் ரோபோவை இஸ்ரோ தயார் செய்திருக்கிறது. இந்த ரோபோ விண்வெளியில் ஆய்வு செய்து இஸ்ரோவுக்கு தகவல் அனுப்பும். 
  • இதற்கான ககன்யான் ராக்கெட் திட்டத்தின் எல்-110 விகாஷ் இன்ஜின் சோதனை, நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. 
  • இஸ்ரோ தலைவர் சோம்நாத் முன்னிலையில் இஸ்ரோ வளாக இயக்குநர் ஆசீர் பாக்கியராஜ், இஸ்ரோ தொழில்நுட்ப பணியாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 240 விநாடிகள் நடைபெற்ற இச்சோதனை ஓட்டம், திட்டமிட்டபடி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel