Recent Post

6/recent/ticker-posts

ரூ.1,260 கோடியில் சென்னை விமான முனையம் - பிரதமர் திறந்து வைத்தார் / 1,260 crore Chennai Airport - Prime Minister inaugurated

  • சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள, புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி திறந்துவைத்தார். 
  • உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம் மூலம், சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் 2.3 கோடியில் இருந்து, 3 கோடியாக உயர்ந்துள்ளது. 
  • விமான நிலையத்தில் உள்ள வசதிகளை, அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கினர். இந்த நிகழ்வில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
  • சென்னை விமான நிலையத்தில், தமிழகத்தின் முக்கிய கோயில்கள், கலைகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சைஓவியங்கள், காஞ்சிபுரம் சேலைகள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். 
  • பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் மாலையில் நடந்த விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
  • மதுரை தல்லாகுளம் - செட்டிகுளம் இடையே ரூ.851 கோடி மதிப்பில் 7.3 கி.மீ. தொலைவிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம், ரூ.528 கோடியில் மதுரை நத்தம் - துவரங்குறிச்சி இடையிலான 24 கி.மீ. நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைத்தார். 
  • மேலும், ரூ.1,077 கோடியில் திருமங்கலம் - வடுகபட்டி இடையிலான 36 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலை, ரூ.1,328 கோடியில் வடுகபட்டி - தெற்குவெங்கநல்லூர் இடையிலான 35.6 கி.மீ. நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரூ.294 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதை, தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel