Recent Post

6/recent/ticker-posts

ஜி20-ன் கீழ் மூன்றாவது கல்வி பணிக்குழுக் கூட்டம் / Third Education Working Group meeting under G20

TAMIL

  • ஜி20இன் கீழ், மூன்றாவது கல்வி பணிக்குழுக் கூட்டம் இன்று ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் ‘பணியின் எதிர்கால சூழலில் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான திறன்களை உருவாக்குதல்' என்ற கருத்தரங்கு தொடங்கியது. 
  • இதில் கல்வித் துறையை உலகளவில் மாற்றுவதற்கான புதுமையான ஆலோசனைகள் மற்றும் கொள்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. முன்னதாக சென்னை மற்றும் அமிர்தசரஸில் நடைபெற்ற இரண்டு பணிக்குழுக் கூட்டங்களின் தொடர்ச்சியாக இப்பணிக்குழுக்கூட்டம் நடைபெறுகிறது.
  • 3 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள், சர்வதேச அமைப்பு நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றள்ளனர்.
  • இக்கூட்டத்தின் முதல் நாளில் மாநில கல்வி அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
  • இப்பணிக்குழுக் கூட்டத்தில் 3 குழு விவாதங்கள் நடைபெறுகின்றன. பிரேசில், ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட், சிங்கப்பூர், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், யுனிஃசெப் அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

ENGLISH

  • The Third Education Working Group meeting under G20 began today in Odisha capital Bhubaneswar with a seminar on 'Building skills for lifelong learning in the future environment of work'. It discusses innovative ideas and policies to transform the education sector globally. 
  • This task force meeting is being held in continuation of two task force meetings held earlier in Chennai and Amritsar. More than 60 representatives from G20 member countries, guest countries and international organization countries have participated in this 3-day meeting.
  • State Education Minister Dr Subhash Sarkar was the Chief Guest on the first day of the meeting.
  • 3 panel discussions are held in this task force meeting. Representatives from Brazil, Spain, United Arab Emirates, Singapore, Russia, South Africa, Mauritius, Australia, England and representatives of UNICEF are participating.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel