Recent Post

6/recent/ticker-posts

2022-23 நிதியாண்டில் இந்திய ரயில்வேயின் முக்கிய சாதனைகள் / Major Achievements of Indian Railways in FY 2022-23

  • 2022-23- ம் நிதியாண்டில், சரக்கு ஏற்றுதல், மின்மயமாக்கல், புதிய பாதை/ இரட்டிப்பு / பாதை மாற்றம், லோகோ உற்பத்தி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்திய ரயில்வே புதிய சாதனைகளை நிகழ்த்தி மைல்கற்களை எட்டியுள்ளது.
  • 2021-22 நிதியாண்டின் 1418 மெட்ரிக் டன்களுடன் ஒப்பிடுகையில், 2022-23ல் இந்திய ரயில்வே 1512 மெட்ரிக் டன் கையாண்டுள்ளது. இது 6.63% அதிகமாகும். 
  • ஒரு நிதியாண்டில் ரயில்வேக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச ஏற்றம் இதுவாகும். 2022-23 நிதியாண்டில் வருவாய் ரூ. 2021-22 இன் ரூ.1.91 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் ரூ.2.44 லட்சம் கோடியாகும். இது 27.75% அதிகமாகும்.

சாதனை மின்மயமாக்கல்

  • 100 சதவீத மின்மயமாக்கலை நிறைவேற்றி, உலகின் மிகப்பெரிய பசுமை ரயில் வலையமைப்பாக இந்திய ரயில்வே வேகமாக முன்னேறி வருகிறது. 
  • 2022-23ல் இந்திய ரயில்வே வரலாற்றில் 6,542 கிமீ தூரம் எட்டப்பட்டுள்ளது. முந்தைய அதிகபட்ச மின்மயமாக்கல் 2021-22 இல் 6,366 கி.மீ. ஆக இருந்தது, இது 2.76% அதிகரிப்பாகும்..
  • புதிய பாதைகள் அமைப்பு, பாதை இரட்டிப்பு, தானியங்கி சிக்னலிங், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், நடை மேம்பாலங்கள் அமைப்பு, மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் அமைத்தல் ஆகிய பணிகளிலும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel