Recent Post

6/recent/ticker-posts

2022-ம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் (FTAs) இந்தியாவுக்கு வருகை குறித்த அறிக்கை / Report on Foreign Tourist Arrivals (FTAs) to India in 2022

  • கொரோனா தொற்றுக்கு முன்பு 2019-ம் ஆண்டு 1.93 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் (FTAs) இந்தியாவிற்கு வந்துள்ளனர். குடியேற்றப் பணியகத்திலிருந்து பெறப்பட்ட அண்மைத் தகவல்களின்படி, 2022-ம் ஆண்டில் இந்தியா 61.9 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 15.2 லட்சமாக இருந்தது.
  • இந்தியாவில் சுற்றுலா மூலம் 2021 மற்றும் 2022-ம் ஆண்டில் பெற்ற அந்நியச் செலாவணி வருவாய் (FEE) விவரங்கள் (ரூ. கோடியில்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
  • 2021ம் ஆண்டு சுற்றுலா மூலம் பெற்ற அந்நியச் செலாவணி - ரூ. 65,070 கோடி
  • 2022ம் ஆண்டு சுற்றுலா மூலம் பெற்ற அந்நியச் செலாவணி - ரூ. 1,34,543 கோடி
நாட்டில் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதற்கும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும் சுற்றுலா அமைச்சகம் பல முயற்சிகளை எடுத்துள்ளது
  • நாட்டின் வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ”தேகோ அப்னா தேஷ்” முயற்சி தொடக்கம்.
  • சிறந்த சேவைத் தரங்களை வழங்குவதற்காக மனிதவளத்தைப் பயிற்றுவிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ‘சேவை வழங்குநர்களுக்கான திறன் உருவாக்கம்’ (CBSP) திட்டத்தின் கீழ் நிகழ்ச்சிகளை நடத்துதல்.
  • 24x7 கட்டணமில்லா பல மொழி சுற்றுலா உதவி எண்.
  • 166 நாடுகளின் மக்களுக்கு இ-சுற்றுலா விசா, இ-வணிக விசா, இ-மருத்துவ விசா, இ-மருத்துவ உதவி விசா மற்றும் இ-கான்பரன்ஸ் விசா ஆகிய 5 துணை வகைகளுக்கு இ-விசா வசதியை வழங்குதல்
  • எளிமையாக்கப்பட்ட இ-விசா மற்றும் விசா கட்டணம் கணிசமாக குறைப்பு
  • நாடு முழுவதும் 55 இடங்களில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த நகரங்களில் உள்ள உட்கட்டமைப்புகள் ஜி-20 கூட்டங்களுக்காக மேம்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 
  • இந்தக் கூட்டங்களுக்கு வரும் பிரதிநிதிகள் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நம் நாட்டின் சுற்றுலாத் தூதுவர்களாக மாறலாம். முக்கியமான சுற்றுலாத் தளங்கள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel