Recent Post

6/recent/ticker-posts

உளுந்தூர்பேட்டையில் ரூ.2,302 கோடி முதலீட்டில் காலணி உற்பத்தி ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து / MoU to set up footwear manufacturing plant at Ulundurpet with an investment of Rs 2,302 crore: Signed in the presence of Chief Minister M. K. Stalin

  • தைவான் நாட்டைச் சேர்ந்த பவு சென் கார்ப்பரேஷன் காலணிகள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம், உலக புகழ்பெற்ற காலணி நிறுவனங்களுக்கு ஒப்பந்த உற்பத்தியாளராக விளங்குகிறது. 
  • பவு சென் குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், காலணி உற்பத்திக்காக அடுத்த 12 ஆண்டுகளில் 2,302 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சிப்காட் உளுந்தூர்பேட்டை தொழிற் பூங்காவில் காலணிகள் உற்பத்திக்கான ஆலை அமைக்க உள்ளது.
  • இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசிற்கும் ஹை க்ளோரி புட் வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. 
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022, தமிழ்நாடு முதல்வரால் வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக, இத்திட்டம் ஈர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
  • மேலும், தொழில் வளர்ச்சி மாநிலம் முழுவதும் பரவலாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்த்திட அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பலன் அளித்திடும் வகையிலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel