Recent Post

6/recent/ticker-posts

வைர விழாவைக் கொண்டாடும் இந்திய விமானப் படையின் 44-வது படைப்பிரிவு / 44 Squadron of the Indian Air Force celebrates its Diamond Jubilee

  • இந்திய விமானப்படையின் 44-வது படைப்பிரிவு சண்டிகரில் இந்த ஆண்டு வைர விழாவைக் கொண்டாடுகிறது. இந்த படைப்பிரிவின் புகழ்பெற்ற வரலாறு, நவீன கால இந்தியாவின் ராணுவ வரலாறு மற்றும் ராணுவ இராஜதந்திரத்தின் கலவையாகும். 
  • தைரியம், துணிவு, வீரம், பக்தி மற்றும் தொழில்முறை ஆகியவற்றிற்கு பெயர் போன இந்திய விமானப்படை, இப்படையின் சாகசங்களால் நிரம்பியுள்ளது.
  • 1961-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி தோற்றுவிக்கப்பட்ட இந்த படை, 1985-ம் ஆண்டு வரை AN-12 விமானம் கொண்டு இயக்கப்பட்டது. 1985-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இப்படை IL-76 விமானத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தது. 
  • அதே ஆண்டு ஜூன் 16-ம் தேதி இப்படை முதன்முறையாக இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக 2021-ம் ஆண்டு நடைபெறவிருந்த வைர விழா கொண்டாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
  • "வசுதைவ குடும்பகம்" என்ற தேசத்தின் நம்பிக்கைக்கு இணங்க, நாட்டின் குடிமக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தேவைப்படும் நேரங்களில் இப்படை பல்வேறு உதவிகளை வழங்கியது. 
  • ‘விடாமுயற்சியின் மூலம் இலக்குகளை அடையுங்கள்’ என்ற நோக்கத்திற்கு ஏற்ப இப்படை செயல்படுகிறது. 1985-ம் ஆண்டில், இப்படைப்பிரிவுக்கு 'மைட்டி ஜெட்ஸ்' என மறுபெயரிடப்பட்டது.
  • இப்படை தோற்றுவிக்கப்பட்டலிருந்து விமானப் படையின் நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட எந்தப் பணியையும் மேற்கொள்வதற்குப் இப்படை எப்போதும் தயாராக உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel