Recent Post

6/recent/ticker-posts

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வணிகரீதியாக இஸ்ரோ செலுத்திய பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் பயணம் வெற்றி / ISRO successfully launched PSLV-C55 rocket from Sriharikota

  • நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக் கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்ணில் செலுத்தி வருகிறது. இதுதவிர, வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துகிறது.
  • அந்த வகையில், சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ்-2 உள்ளிட்ட 2 செயற்கைக் கோள்களை வணிகரீதியாக விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (Newspace India Limited) அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
  • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், ராக்கெட் பயணத்துக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் கடந்த 21-ம் தேதி தொடங்கியது.
  • இந்நிலையில், மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து 2 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் நேற்று மதியம் 2.19 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 19 நிமிடத்தில் 2 செயற்கைக் கோள்களும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
  • இதில் முதன்மை செயற்கைக் கோளான டெலியோஸ்-2 மொத்தம் 741 கிலோ எடை கொண்டது. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான இது, சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. 
  • இது அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும். இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த செயற்கைக் கோள் பயன்படுத்தப்பட உள்ளது.
  • இதனுடன் ஏவப்பட்ட லூம்லைட்-4 (16 கிலோ) எனும் சிறிய செயற்கைக் கோள், சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டது. இது தொழில்நுட்ப ஆய்வு மற்றும் கடல்வழி போக்குவரத்துக்கு உதவும்.
  • இதுதவிர, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ்-4 பகுதியில் 'போயம்-2' எனும் பெயரில் 3-வது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 
  • அதன்படி, பிஎஸ்-4பகுதியில் இஸ்ரோ, இந்திய வான் இயற்பியல் நிறுவனம் உட்பட 4 ஆராய்ச்சி மையங்களுக்கு சொந்தமான 7 ஆய்வுக்கருவிகள் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. 
  • செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, பிஎஸ்-4 பகுதியின் உதவியுடன் இந்த ஆய்வுக் கருவிகள், புவியை வலம் வந்து அடுத்த ஒரு மாதத்துக்கு ஆய்வு மேற்கொள்ளும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel