கொரோனா தொற்று, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றினால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
முன்னதாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்திருந்தது.
இந்நிலையில், உலக வங்கி தனது முந்திய இந்திய பொருளாதார வளர்ச்சி அளவீடான 6.6 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் நிலவும் பொருட்களின் நுகர்வு, இந்தியா எதிர்கொள்ளும் சவாலான நிபந்தனைகள் ஆகியவற்றினால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட சற்று குறைந்து 6.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் கடன் செலவு, குறைந்த வருமானம் ஆகியவற்றினால் நுகர்வோர் பயன்பாடு குறைந்ததால் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்ததாக உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments