Recent Post

6/recent/ticker-posts

ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை குழு ஒப்புதல் / Cabinet Committee approves Cinematography Amendment Bill

  • திரைப்படங்களுக்கான தணிக்கை, 'யு, யு/ஏ, ஏ' என்ற மூன்று வகையாக தற்போது வழங்கப்படுகிறது. 'யு' சான்று அனைத்து வயதினரும் பார்க்க அனுமதிக்கிறது. 'யு/ஏ' சான்று, 12 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர் கண்காணிப்புடன் பார்க்க அனுமதிக்கிறது. 
  • 'ஏ' சான்று, பெரியவர்களுக்கு மட்டுமானதாக உள்ளது.இதை ஒளிப்பதிவு திருத்த மசோதாவில், 'யு, யு/ஏ 7 பிளஸ், யு/ஏ 13 பிளஸ், யு/ஏ 16 பிளஸ் மற்றும் ஏ' என, ஐந்து வகையாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
  • மேலும், இணைய தளத்தில் திரைப்படங்களை வெளியிடும் நபர்களுக்கு மூன்று மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 3 லட்சம் ரூபாய் முதல், தயாரிப்பு செலவில் 5 சதவீத தொகை வரை அபராதம் விதிக்கவும் இந்த புதிய திருத்த மசோதா வழி செய்கிறது.
  • இந்த ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel