- ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதி போட்டியின் முதல் ஆட்டத்தில் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் குகேஷை வீழ்த்தினார்.
- இரட்டை எலிமினேஷன் போட்டி என்பதால் குகேஷுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது. இதில் குகேஷ் 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் நோடிர்பெக் அப்துசட்டோரோவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
- இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற குகேஷுக்கு ரூ.16.05 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
- ஆசியா ஓசியானியா பிரிவில் இருந்து வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆர்மகெடோன் உலக அளவிலான இறுதிப் போட்டிக்கு குகேஷுடன், நோடிர்பெக் அப்துசட்டோரோவும் தகுதி பெற்றுள்ளார்.
0 Comments