மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஆர்இசி-யின் ஆர்இசி பவர் டெவலப்மென்ட் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் (ஆர்இசிபிடிசிஎல்) டிரான்ஸ்மிஷன் திட்டத்தின் கட்டுமானத்திற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்க நிறுவனமான கேபிஎஸ்1 டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தை மேகா என்சீனியரிங் & இன்பராஸ்ட்ரக்சர் நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
இந்த நிறுவனம் கையளிக்கப்பட்டதன் மூலம், ரூ.70, 974 கோடிமதிப்பிலான 52 டிரான்ஸ்மிஷன் திட்டங்களை, ஆர்இசிபிடிசிஎல் வெற்றிகரமாக ஒப்படைத்தது.
ஆர்இசிபிடிசிஎல்- இன் தலைமை செயல் அதிகாரி திரு ராகுல் திவேதி, மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் துணைத் தலைவர் திரு பிரவின் ஷரத் தீக்ஷித்திடம் எஸ்பிவியை ஒப்படைத்தார்.
மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட். இந்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத் திட்டத்தின் வெற்றிகரமான ஏலதாரர் ஆகும்.
இந்த வேலையில் 765 கி.வா இரட்டை மின்சுற்று லைன் மற்றும் கவ்தா PS1 இன் விரிவாக்கம் ஆகியவை அடங்கும். இத்திட்டத்தை 21 மாதங்களில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
0 Comments