Recent Post

6/recent/ticker-posts

ஜெய்பூர்-தில்லி கண்டோன்மெண்ட் இடையே ராஜஸ்தானின் முதலாவது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து அனுப்பிவைத்தார் / PM flagged off Rajasthan's first Vandebharat Express between Jaipur-Delhi Cantonment

  • ராஜஸ்தானின் முதலாவது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்போக்குவரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
  • முதற்கட்டமாக தொடக்க நாளில் ஜெய்பூர்-தில்லி கண்ட்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வழக்கமான சேவை ஏப்ரல் 13 அன்று தொடங்கும். இந்த ரயில் அஜ்மீரிலிருந்து ஜெய்பூர், ஆல்வர், குர்கான் வழியே தில்லி கண்ட்டோன்மென்ட் வரை இயக்கப்படும்.
  • தில்லி கண்ட்டோன்மென்ட்- அஜ்மீர் இடையேயான தொலைவினை இந்த ரயில் 5 மணி 15 நிமிடங்களில் அடையும். தற்போது இந்த வழித்தடத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணி 15 நிமிடங்களில் சென்றடைகிறது. 
  • அதே வழித்தடத்தில் தற்போது மற்ற ரயில்கள் செல்லும் நேரத்தைவிட 60 நிமிடங்கள் விரைவாக புதிய வந்தேபாரத் ரயில் இயக்கப்படும். 
  • புஷ்கர், அஜ்மீர் ஷரிஃப் தர்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களை இந்த ரயில் இணைக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel