அசாம் மாநிலத்துக்கு 3 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேஸ்பூரில் உள்ள விமானப் படை தளத்துக்கு சென்றார்.
விமானப்படை வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியா தையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். அதன்பின் சுகோய் ரக போர் விமானத்தில் அவர் முதல் முறையாக பறந்தார்.
அந்த விமானத்தை, குரூப் கேப்டன் நவீன் குமார் இயக் கினார். அந்த விமானம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 கி.மீ உயரத்திலும், மணிக்கு சுமார் 800 கி.மீ வேகத்திலும் பறந்தது.
சுகோய் போர் விமானத்தில் சுமார் அரை மணி நேரம் பயணம் செய்த குடியரசுத் தலைவர் பிரம்மபுத்ரா முதல் தேஸ்பூர் வரையில் இமயமலைப் பகுதிகளை பார்வையிட்டு பின் விமானப்படை தளத்துக்கு திரும்பினார்.
இதன் மூலம் போர் விமானத்தில் பறந்த 3வது இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் 2வது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கடந்த 2009-ம் ஆண்டு புனே விமானப்படை தளத்தில் இருந்து சுகோய் விமானத்தில் பறந்தார்.
0 Comments